சீறும் பைக்கில் இருந்து கீழே விழுந்த அஜித்: த்ரில்லான 'வலிமை' மேக்கிங் வீடியோ!
அஜித் நடித்த ‘வலிமை’ படத்தின் ஸ்டண்ட் மேக்கிங் வீடியோ இன்று வெளியாகும் என ஏற்கனவே தகவல் வெளியான நிலையில் சற்று முன் அந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
போனிகபூர் தயாரிப்பில், அஜித் நடிப்பில், எச் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் ‘வலிமை’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படம் பொங்கல் தினத்தில் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இந்த படத்தின் ஸ்டண்ட் மேக்கிங் வீடியோ சற்றுமுன்னர் வெளியாகியுள்ளது. மூன்று நிமிடங்கள் ஓடும் இந்த வீடியோவில் அஜித் உள்பட படக்குழுவினர்களின் கடினமான உழைப்பு ஒவ்வொரு பிரேமிலும் தருகிறது.
குறிப்பாக இந்த வீடியோ முடிவடையும்போது சீறிவரும் பைக்கில் வரும் அஜித், திடீரென கீழே விழுவதும் அதன் பின் எழுந்து சுதாரித்து எழுந்து மீண்டும் அதே ஷாட்டுக்காக சீறி வரும் பைக்கை ஓட்டுவதுமான காட்சிகள் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.