அனிருத்-சிவகார்த்திகேயன் இணைந்த 'எடக்கு மொடக்கு' பாடல்: இணையத்தில் வைரல்
இசையமைப்பாளர் அனிருத் இசையமைப்பில் ஏற்கனவே நடிகர் சிவகார்த்திகேயன் சில பாடல்கள் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பாக ’கோலமாவு கோகிலா’ படத்தில் இடம்பெற்ற ‘கல்யாண வயசு’ பாடல், ’டாக்டர்’ படத்தில் இடம் பெற்ற ’செல்லம்மா’ மற்றும் ’ஓ பேபி’ ஆகிய பாடல்கள் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நடிகர் சதீஷ் நாயகனாக நடிக்கும் ’நாய் சேகர்’ என்ற திரைப்படத்தில் அனிருத் இசையமைத்து வரும் நிலையில் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஒரு பாடலை எழுதி உள்ளதாகவும் ’எடக்கு மொடக்கு’ என்று தொடங்கும் இந்த பாடல் இன்று வெளியாகும் என்று ஏற்கனவே படக்குழுவினர் தகவல் வெளியிட்டு இருந்தனர் என்பதை பார்த்தோம்.
இந்த நிலையில் சற்று முன்னர் இந்த பாடல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அனிருத் இசையில் சிவகார்த்திகேயன் பாடல் வரிகளில் உருவாகிய இந்த எடக்கு மொடக்கு’ பாடலை அனிருத் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சதீஷ், பவித்ரா லட்சுமி, ஜார்ஜ் நாராயணன், லிவிங்ஸ்டன், இளவரசு, மனோபாலா உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை ஏஜிஎஸ் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ் சுரேஷ் ஆகியோர் தயாரித்து வருகின்றனர் என்பதும் இந்த படத்தை கிஷோர் ராஜ்குமார் என்பவர் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.