வேறலெவல் போட்டோஷுட் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை ராஷிகண்ணா!
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை ராஷிகண்ணா. தற்போது தமிழிலும் பல திரைப்படங்களில் படு பிசியாக நடித்துவருகிறார். இளமையான தோற்றமும் க்யூட்டான சிரிப்பும் கொண்ட இவருடைய ரியாக்ஷன்களுக்கு பல இளைஞர்கள் அடிமையாகவே இருக்கின்றனர்.
நடிகர் ஜெயம் ரவி நடித்த “அடங்கமறு” திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த இவர் அதற்குப் பின்பு, “சங்கத்தமிழன்”, “மாநாடு“, “அயோக்யா“ போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். லேடிசூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் நடிகர் அதர்வா நடிப்பில் வெளியான “இமைக்கா நொடிகள்“ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பெரிய வரவேற்பை பெற்றார். மேலும் சமீபத்தில் நடிகர் விஜய்சேதுபதியுடன் இவர் நடித்திருந்த துக்ளக் தர்பார்“ திரைப்படமும் இவருக்கு நல்ல பெயரை வாங்கிக்கொடுத்தது.
இதையடுத்து “அரண்மனை3“, நடிகர் சித்தார்த்துடன் “ஷைத்தான் கா பச்சா”, “சர்தார்“, “கடைசி விவசாயி“, “திருச்சிற்றம்பலம்” போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்துவரும் நடிகை ராஷி கண்ணா அவ்வபோது போட்டோஷுட் புகைப்படங்களை வெளியிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
அந்த வகையில் கோல்டன் நிறத்தில் ஹை ஹீல்ஸ் அணிந்து இவர் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் தற்போது ரசிகர்களின் பாசிட்டிவ் கமெண்டுகளை பெற்று வைரலாகி வருகின்றன.