'பீஸ்ட்' அப்டேட் தந்த அனிருத்: விஜய் ரசிகர்கள் குஷி!

'பீஸ்ட்' அப்டேட் தந்த அனிருத்: விஜய் ரசிகர்கள் குஷி!

தளபதி விஜய் நடித்து வரும் 'பீஸ்ட்’ படத்தின் படப்பிடிப்பு ஒரு பக்கமிருக்க விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் இன்னொரு பக்கம் 'பீஸ்ட்’ படத்தின் இசையமைப்பாளர் அனிருத் அவர்கள் இந்த படத்தின் அப்டேட் குறித்த தகவலை தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் இசையமைப்பாளர் அனிருத் இன்ஸ்டாகிராமில் நேரடியாக ரசிகர்களுடன் உரையாடினார். அப்போது ரசிகர்கள் கேட்ட பல கேள்விகளுக்கு சுவராசியமாக அவர் பதில் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஒரு ரசிகர் 'பீஸ்ட்’ படம் குறித்த அப்டேட்டை கேட்க, அதற்கு அனிருத், 'பீஸ்ட்’ படத்தின் ஸ்பெஷல் அப்டேட்டை விரைவில் படக்குழுவினர் வெளியிடுவார்கள் என்று தெரிவித்துள்ளார். இதனை அடுத்து 'பீஸ்ட்’ படத்தின் புத்தம் புதிய அப்டேட் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனேகமாக ஆயுதபூஜை தினத்தில் 'பீஸ்ட்’ படத்தின் சிங்கிள் பாடல் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தளபதி விஜய் ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்துவரும் இந்த படத்தில் செல்வராகவன், யோகிபாபு, ஷைன் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், அபர்ணா தாஸ் உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கல் தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

LATEST News

Trending News