இது ஆந்தாலஜி படம் இல்லை....! படக்குழு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு....!

இது ஆந்தாலஜி படம் இல்லை....! படக்குழு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு....!

இயக்குநர் வெங்கட் பிரபு மற்றும் டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ரவிச்சந்திரன் இணைந்து தயாரிக்கும் திரைப்படம் தான், கசடதபற’. இப்படத்தை பிரபல இயக்குனர் சிம்புதேவன் இயக்கியுள்ளார். இத்திரைப்படத்தில் வெங்கட் பிரபு, சாந்தனு, சந்தீப் கிஷன், ஹரீஷ் கல்யாண், ரெஜினா,பிரியா பவானி ஷங்கர், விஜயலட்சுமி,பிரேம்ஜி உள்ளிட்ட பிரம்மாண்ட நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இப்படம் ஹைப்பர்-லிங் திரைப்படமாக இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படக்குழு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.

கிட்டத்தட்ட 5 வருடங்கள் கழித்து சிம்புதேவன் இப்படத்தை இயக்கியுள்ளார். இதனால் ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பு துவங்கியுள்ளது. மேலும் இப்படத்தில் உள்ள சுவாரசியம் என்னவென்றால், யுவன் ஷங்கர் ராஜா, சந்தோஷ் நாராயணன், ஜிப்ரான், சாம் சி எஸ், ஷான் ரோல்டன், பிரேம்ஜி உள்ளிட்ட பிரபல இசையமைப்பாளர்கள் இணைந்து இசையமைத்துள்ளனர்.

சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் சமூகவலைத்தளங்களில் பெருமளவில் வரவேற்பு பெற்றது. வருகின்ற ஆகஸ்ட் 27-ல், ஓடிடி தளமான சோனி லைவ்-ம் திரைப்படம் வெளியாகவுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை டுவிட்டரில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் படக்குழுவினர் ஏற்கனவே வெளியிட்டிருந்தனர்.

இந்நிலையில் படம் குறித்த முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. "மறுபடியும் மறுபடியும் சொல்றோம், இது ஆந்தலாஜி படம் இல்லை" என படக்குழுவினர் போஸ்டர் ஒன்றை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளனர்.
இந்த முக்கிய அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இதையும் படியுங்கள் : விஜய்யின் 'தளபதி 66' படத்திற்கு இத்தனை கோடி சம்பளமா? ரஜினியை முந்திவிட்டாரா?

LATEST News

Trending News

HOT GALLERIES