மாலத்தீவில் மாளவிகா: பிகினி உடையில் நீச்சல்குள புகைப்படம் வைரல்!

மாலத்தீவில் மாளவிகா: பிகினி உடையில் நீச்சல்குள புகைப்படம் வைரல்!

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மாலத்தீவுக்கு கடந்த சில மாதங்களாக நடிகைகள் செல்லாமல் இருந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து விட்டதை அடுத்து மீண்டும் மாலத்தீவுக்கு நடிகைகள் படையெடுத்துள்ளனர். ஏற்கனவே நடிகை ஆண்ட்ரியா மாலத்தீவுக்கு சென்று பிகினி புகைப்படம் உள்பட பல்வேறு புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது அஜித் நடித்த ’உன்னை தேடி’ என்ற திரைப்படத்தில் அறிமுகமான நடிகை மாளவிகா கணவர் மற்றும் குழந்தைகளுடன் மாலத்தீவு சென்றுள்ளார். அங்கு அவர் நீச்சல் குளத்தில் பிகினி உடையுடன் எடுத்த புகைப்படம் உள்பட பல புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

அஜித் நடித்த ’உன்னைத்தேடி’ ’ஆனந்த பூங்காற்றே’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை மாளவிகா. கடந்த 2007ஆம் ஆண்டு சுமேஷ் மேனன் என்பவரை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

திருமணத்திற்கு பிறகு மும்பையில் செட்டிலாகி விட்ட நடிகை மாளவிகா சமீபத்தில் குடும்பத்தினருடன் மாலத்தீவு சென்றுள்ளார். அங்கு அவர் எடுத்த விதவிதமான புகைப்படங்களை அவ்வப்போது பதிவு செய்து வருகிறார் என்பதும் அவற்றில் ஒன்றுதான் நீச்சல்குள பிகினி புகைபப்டம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News