விஜய்யின் இந்த படத்தை தூக்கி எறிந்த சூர்யாவின் மனைவி ஜோதிகா! இதுதான் உண்மை காரணமாம்..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். நடிகை ஜோதிகாவும் ஆரம்பகால முதல் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தும் முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்தும் பிரபலமானார்.
விஜய்யுடன் பல படங்களில் நடித்த ஜோதி சமீபத்தில் அவரின் நடிப்பில் இயக்குநர் அட்லீ இயகத்தில் வெற்றி பெற்ற படமான மெர்சல் படத்தில் நடிக்க மறுத்திருந்தார். நித்யா மேனன் நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தவர் ஜோதிகா தான். ஆனால் அட்லி கதை சொல்லும் போது ஸ்கிரிப்ட் குறித்த கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
இந்த கருத்து வேறுபாடு காரணமாக தான் அவர் இந்த படத்தில் நடிக்கவில்லை என்று கூறியுள்ளார். இந்த படத்தில் இருந்து விலகுவதாக தகவல் வெளியானதும் விஜய் ரசிகர்கள் அவரை தாக்கி பேசியது வருத்தத்தை ஏற்படுத்தியது என்றும் குறிபிட்டுள்ளார் நடிகை ஜோதிகா.