ச்சைக்.. கன்றாவி.. அந்த நேரத்தில் உடலுறவு.. நடிகர் நாஞ்சில் விஜயன்.. ஆதாரத்தை வெளியிட்ட திருநங்கை காதலி.. பகீர் வீடியோ...
விஜய் டிவி நிகழ்ச்சிகளில் காமெடியனாக பிரபலமான சின்னத்திரை நடிகர் நாஞ்சில் விஜயன் மீது திருநங்கை ஒருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் பாலியல் புகார் அளித்துள்ளார்.
திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, தன்னை பாலியல் ரீதியாக பயன்படுத்தி ஏமாற்றிவிட்டதாக அவர் புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.
விஜய் டிவியில் 15 ஆண்டுகளாக பணியாற்றி வருவதாகவும், கடந்த 5 ஆண்டுகளாக நாஞ்சில் விஜயனுடன் காதல் உறவில் இருந்ததாகவும் திருநங்கை தனது புகாரில் தெரிவித்துள்ளார்.
"நாஞ்சில் விஜயன் என்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தார். ஆனால், பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொண்டு என்னை ஏமாற்றிவிட்டார்," என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். தனது வழக்கறிஞருடன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த அவர், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து விவரங்களைப் பகிர்ந்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய திருநங்கை, "நான் வில்லிவாக்கத்தில் தனியாக வசித்து வந்தேன். அந்த வீட்டிற்கு நாஞ்சில் விஜயன் அடிக்கடி வந்து செல்வார். எங்கள் காதல் பற்றி அவரது குடும்பத்தினருக்குத் தெரியும்.
அவருக்கு திருமணமாவதற்கு முன் வரை அவரது குடும்பத்தினர் என்னுடன் நன்றாகப் பேசினார்கள். ஆனால், திருமணத்திற்குப் பிறகு என்னை ஒதுக்க ஆரம்பித்தனர்," என்றார்
மேலும், "திருமணத்திற்குப் பிறகும் நாஞ்சில் விஜயன் என்னுடன் பழகிக் கொண்டிருந்தார். ஆறு மாதங்களுக்கு முன் நாங்கள் ரெசாட் சென்றிருந்தோம். ஆனால், திடீரென ஒரு நாள், ‘வீட்டில் அடிக்கடி சண்டை வருகிறது, குழந்தை இருக்கிறது, இனி நாம் பழக வேண்டாம்’ என்று கூறிவிட்டார்.
நான் திருநங்கை என்பதைத் தெரிந்தே காதலித்தவர், இப்போது அதையே காரணம் காட்டி ஒதுக்குவது மனதை வேதனைப்படுத்துகிறது," என்று அவர் வேதனையுடன் தெரிவித்தார்.
நாஞ்சில் விஜயன், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் காமெடி நிகழ்ச்சிகளில் பெண் கெட்டப்பில் தோன்றி ரசிகர்களிடையே பிரபலமானவர்.
2023ஆம் ஆண்டு மரியம் என்பவரை திருமணம் செய்த இவருக்கு, சமீபத்தில் பெண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், அவர் மீது தொடரப்பட்ட இந்த புகார் சின்னத்திரை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த புகார் தொடர்பாக சென்னை காவல்துறை விசாரணையைத் தொடங்கியுள்ளது. நாஞ்சில் விஜயனிடம் விசாரித்தபோது, அவர் திருநங்கையுடன் நட்பு ரீதியாக மட்டுமே பழகியதாகக் கூறியுள்ளார். இந்த விவகாரம் குறித்து மேலும் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.
நாஞ்சில் விஜயன் மீதான இந்த புகார், சமூக ஊடகங்களிலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக காவல்துறையின் மேல் விசாரணையில் உண்மை நிலை வெளிப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.