தனது மகனின் புகைப்படத்தை முதன்முறையாக வெளியிட்ட இந்திரஜா ஷங்கர்.. முருகன் வேடத்தில் கியூட் போட்டோ
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் கலக்கிய பிரபலங்களில் ஒருவர் தான் ரோபோ ஷங்கர்.
விஜய் டிவியில் வந்த ரியாலிட்டி ஷோக்களை பயன்படுத்தி தனது திறமைகை வெளிக்காட்டி முன்னேறியவர்.
தமிழ் சினிமாவிலும் முக்கிய காமெடி நடிகராக வலம் வருகிறார். இவரது மகள் என்ற அடையாளத்தோடு விஜய்யின் பிகில் படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து கவனம் பெற்றார் இந்திரஜா ஷங்கர்
அதன்பின் தெலுங்கில் பாகல் படத்தில் நடித்தவர் தமிழில் விருமன், அகத்தியா போன்ற படங்களில் நடித்தார்.
நடிகை இந்திரஜாவிற்கு கடந்த 2024ம் ஆண்டு கார்த்திக் என்பவருடன் திருமணம் நடந்தது. பின் கர்ப்பமாக இருக்கும் செய்தியை வெளியிட்டவர்களுக்கு சமீபத்தில் மகனும் பிறந்துள்ளார்.
கமல்ஹாசனிடம் தனது மகனுக்கு பெயர் வைக்க கூற அவரும் நட்சத்திரன் என பெயர் வைத்துள்ளார்.
இந்திரஜா தனது மகனுக்கு முருகன் வேடம் போட்டு போட்டோ ஷுட் நடத்தி அந்த புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். அவரது மகனின் போட்டோவிற்கு ரசிகர்கள் லைக்ஸ் குவித்து வருகிறார்கள்.