கயாடு லோஹருக்கு அடித்த ஜாக்போட்.. முன்னணி ஹீரோவிற்கு ஜோடி

கயாடு லோஹருக்கு அடித்த ஜாக்போட்.. முன்னணி ஹீரோவிற்கு ஜோடி

டிராகன் படம் சமீபத்தில் வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்தது. இப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த தமிழக ரசிகர்களின் மனதை கொள்ளைகொண்டுள்ளார் நடிகை கயாடு லோஹர்.

கயாடு லோஹருக்கு அடித்த ஜாக்போட்.. முன்னணி ஹீரோவிற்கு ஜோடி | Kayadu Lohar Join Hands With Simbu

இவர் மலையாள சினிமா மூலம் நடிகையாக அறிமுகமாகியுள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு தனக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார். மேலும் சமீபத்தில் வெளிவந்த டிராகன் படம் மாபெரும் வெற்றியை இவருக்கு தேடி கொடுத்துவிட்டது.

இந்த நிலையில், டிராகன் படத்தின் வெற்றியை தொடர்ந்து கயாடு லோஹருக்கு மிகப்பெரிய ஜாக்போட் அடித்துள்ளது. ஆம், சிம்பு நடிப்பில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் STR 49 திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க போகிறாராம் கயாடு லோஹர்.

இந்த தகவல் தற்போது இணையத்தில் உலா வரும் நிலையில், அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இதுவரை படக்குழுவிடம் இருந்து வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கயாடு லோஹருக்கு அடித்த ஜாக்போட்.. முன்னணி ஹீரோவிற்கு ஜோடி | Kayadu Lohar Join Hands With Simbu

மேலும் இப்படத்தில் சந்தானம் மற்றும் மிருணாள் தாகூர் ஆகியோர் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் இதற்கான அறிவிப்பு எப்போது வெளியாகிறது என்று.

LATEST News

Trending News