100 கோடியை தொடர்ந்து புதிய வசூல் சாதனை படைத்த டிராகன்.. மாஸ் காட்டும் பிரதீப்

100 கோடியை தொடர்ந்து புதிய வசூல் சாதனை படைத்த டிராகன்.. மாஸ் காட்டும் பிரதீப்

இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து கடந்த 2021ம் ஆண்டு வெளிவந்த ஓ மை கடவுளே படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். முதல் படமே இவருக்கு மாபெரும் வெற்றியை தேடி கொடுத்தது.

இதை தொடர்ந்து இவர் இயக்கத்தில் உருவாகி கடந்த பிப்ரவரி மாதம் வெளிவந்த திரைப்படம்தான் டிராகன். பொதுவாக பிப்ரவரி மாதம் தமிழ் சினிமாவில் பெரிதும் வசூல் செய்யும் திரைப்படங்கள் வெளிவராது என கூறுவார்கள்.

 

100 கோடியை தொடர்ந்து புதிய வசூல் சாதனை படைத்த டிராகன்.. மாஸ் காட்டும் பிரதீப் | Dragon Movie Box Office Record

ஆனால், அதனை டிராகன் படத்தின் மூலம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 21ம் தேதி திரைக்கு வந்த இப்படம் 10 நாட்களில் உலகளவில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படித்தது. லவ் டுடே படத்தை தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவான டிராகன் திரைப்படமும் ரூ. 100 கோடி வசூலை ஈட்டியது.

 

இந்த நிலையில் தற்போது 25 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் டிராகன் திரைப்படம் மற்றொரு சாதனையையும் பாக்ஸ் ஆபிஸில் படைத்துள்ளது. அதாவது இதுவரை உலகளவில் ரூ. 150 கோடிக்கும் மேல் டிராகன் படம் வசூல் செய்துள்ளது என்பது தான் அந்த சாதனை.

 

100 கோடியை தொடர்ந்து புதிய வசூல் சாதனை படைத்த டிராகன்.. மாஸ் காட்டும் பிரதீப் | Dragon Movie Box Office Record

ஆம், 25 நாட்களை நிறைவு செய்த டிராகன் உலகளவில் ரூ. 150 கோடிக்கும் மேல் வசூலை ஈட்டியுள்ளது. ரூ. 37 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் தற்போது இந்த அளவிற்கு வசூல் செய்து, தயாரிப்பாளர் மாபெரும் லாபத்தை கொடுத்துள்ளது என்பது மாபெரும் சாதனை என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.

LATEST News

Trending News