அட்ஜெஸ்ட்மெண்ட்.. அஞ்சு நிமிஷம் தானே.. கூச்சமின்றி அட்ஜெஸ்ட்மெண்ட் பற்றி ஓப்பனாக பேசிய இளம் நடிகை..!
சமீப நாட்களாக நடிகைகள் பலரும் அட்ஜஸ்மென்ட் கொடுமையால் சினிமாவை விட்டு ஓடும் நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
பலர் அதை பொதுவெளியில் வந்து மிகவும் வெளிப்படையாக தங்களுக்கு நேர்ந்த அட்ஜஸ்ட்மெண்ட் கொடுமைகளை பற்றி வெளிப்படையாக பேசியிருக்கிறார்கள் .
இந்த அட்ஜஸ்ட்மெண்ட் கொடுமை எல்லாம் அந்த காலத்தில் இருந்தே இருந்து வந்தது தான். ஆனால் அதை வெளியில் வந்து யாரும் சொல்வது கிடையாது.
நடிகைகள் தாங்கள் வெளியில் சொல்லிவிட்டால்… சம்பந்தப்பட்ட அந்த நபரால் பின்னாளில் மிகப்பெரிய பாதிப்பு உண்டாக்கும் என சொல்வதே கிடையாது.
இப்படி சொல்வவதால் நடிப்பதில் ஏதேனும் பிரச்சனைகள் வந்துடக்கூடாது என்பதற்காக தங்களுக்குள் நடந்த அட்ஜஸ்ட்மெண்ட் கொடுமையை வெளிவந்து பொதுவெளியில் சொல்லவே மாட்டார்கள்.
அப்படியே அதை மறைத்துவிடுவார்கள். ஆனால் சமீப நாட்களாக அப்படி கிடையாது. நடிகைகள் தங்களுக்குள் நடக்கும் அட்ஜஸ்ட்மென்ட் கொடுமை பற்றியும் யார் அந்த நபர் என்பதை கூட போட்டு உடைத்து விடுகிறார்கள்.
இதனால் நாம் ஒரு மனக்கணக்கு போட்டு வைத்திருப்போம். இந்த நடிகர் திரைப்படங்களில் மிகச்சிறப்பாக நடிக்கிறார் நல்ல மனிதராக இருப்பார் என்று .
ஆனால், அவர்களின் உண்மை ரூபம் இது போன்ற சமயத்தில் வெளிவரும் போது எல்லோருக்கும் பேரதிர்ச்சியாக இருக்கிறது .
அப்படித்தான் பாடகி சின்மயி -வைரமுத்து விவகாரம் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது. மிகுந்த மரியாதைக்குரிய மனிதராக வைரமுத்து பார்க்கப்பட்டார்.
ஆனால் சின்மயை கூறிய குற்றச்சாட்டால் அவரின் முகத்திரை கிழிந்தது. அவ்வளவு ஏன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா கூட தனக்கு அட்ஜஸ்ட்மென்ட் கொடுமை பற்றி பேசியுள்ளார்.
அத்தோடு தமிழ் சினிமாவில் நட்சத்திர நடிகர் ஆன சரத்குமாரின் மகள் வரலட்சுமிக்கும் அட்ஜஸ்மென்ட் கொடுமை வீட்டிற்கு சென்று கேட்டதாக அவர் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
அதாவது என்னுடைய அப்பா இவ்வளவு பெரிய நடிகராக என் குடும்பமே திரைத்துறையை சேர்ந்த குடும்பமாக இருக்கும்போதே என் வீட்டேறி வந்து அட்ஜஸ்ட்மெண்ட் கேட்கிறார் என்றால் சாதாரண பெண்கள் பேக்ரவுண்ட் இல்லாத பெண்களுக்கு எவ்வளவு கொடுமைகள் இதுபோன்று நடந்திருக்கும் என்பதுதான் என்னால் யூகிக்க முடியவில்லை என வரலட்சுமி கூறினார்.
இப்படி பெரிய நடிகைகள், சின்ன நடிகைகள், வாரிசு நடிகைகள் ,நட்சத்திர வீட்டு நடிகைகள் என பாகுபாடு இன்றி எல்லோருக்கும் அட்ஜஸ்ட்மெண்ட் கொடுமைகள் சினிமாவில் நடந்து கொண்டுதான் இருக்கிறது.
அதை தவிர்க்கவும் முடியாது அதை. மறைக்கவும் முடியாது. இது காலம் காலமாக இருந்துதான் வருகிறது அந்த வகையில் தற்போது பிரபல சீரியல் நாடியன யாழினி தனக்கு நடந்த அட்ஜஸ்ட்மெண்ட் கொடுமை பற்றி கூறியுள்ளார்.
மேலும், சினிமாவில் நடக்கும் மோசமான செயல்கள் பற்றி கூறியிருக்கிறார். அதாவது, சினிமாவைப் பொருத்தவரை இது நல்ல பிளாட்பார்ம் தான்.
ஆனால், சிலர் இங்கு சென்றாலே மோசமான நபர்கள் இருப்பார்கள்…. படுக்கைக்கு அழைப்பார்கள் என எல்லோரும் நம்பிக்கொண்டு தங்கள் வீட்டு பெண்களை சினிமாவில் நடிக்க செல்வதை அனுமதிப்பதே கிடையாது.
அட்ஜஸ்ட்மெண்ட் கொடுமை என்பது சினிமாவில் மட்டுமில்லை நாம் செல்லும் இடமெல்லாம் எல்லாத் துறைகளிலும் இருக்கிறது.
நாம் தான் கவனமாகவும் உஷாராகவும் இருக்கவேண்டும்… திட்டவட்டமாக முடியாது என்று கூறவேண்டும்.
அந்த ஐந்து நிமிடம் ஐந்து நிமிடம் மகிழ்ச்சியில் தான் எல்லாம் இருக்கிறது. என்றால் அப்படிப்பட்ட வாய்ப்பை நமக்கு தேவையில்லை.
எனக்கும் இது போன்ற பலர் அட்ஜஸ்ட்மென்ட்டிற்காக அழைத்திருக்கிறார்கள். நான் முடியது என சொல்லியதும் என்னை வைத்து எடுக்கப்பட்ட அத்தனை காட்சிகளையும் டெலீட் செய்து விட்டார்கள்.
மேலும் அடுத்த அடுத்த வாய்ப்புகளும் எனக்கு கிடைக்க விடாமல் செய்துவிட்டார்கள். வேறு என்ன செய்வது இதுதான் உலகத்தில் நடக்கிறது.
அதற்காக நம்முடைய கனவு லட்சியம் ஆசைக்காக கஷ்டப்பட்டு இந்த துறையை தேர்ந்தெடுத்து இங்கு வந்திருக்கிறோம்.
இதுபோன்ற அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனையால் இந்த துறையை விட்டு ஓடி விட முடியாது என யாழினி அந்த பேட்டியில் வெளிப்படையாக பேசினார்.