நடிகையின் மீது தீராத மயக்கம்.. கேரவனில் ட்ரீட்மென்ட் கொடுத்த நடிகர்
பிரபல நடிகரின் படம் விரைவில் வெளிவர இருக்கும் நிலையில் படத்தின் பாடல் ஒன்று இப்போது சக்கை போடு போட்டு வருகிறது. சில முகம் சுளிக்கும் நடன ஆசைகள் இருந்தாலும் கூட அது ட்ரெண்டிங்கில் உள்ளது.
இதற்கு காரணம் நடிகை தாறுமாறாக குத்திய குத்து தான். ஏற்கனவே படத்தில் ஒரு பாடலுக்கு இளம் நடிகை ஆட்டம் போட்டு இருக்கிறார். அவரை காலி செய்வதற்காகவே ஹீரோயின் இந்த பாட்டுக்கு செம ஆட்டம் போட்டிருக்கிறார்.
இத்தனைக்கும் டான்ஸ் மாஸ்டர் இந்த அளவுக்கு மூவ்மென்ட் வேண்டாம் என சொல்லி இருக்கிறார். ஆனாலும் நடிகை பிடிவாதமாக நானும் டான்சர் தான் என கெத்து காட்டி ஆடி இருக்கிறார்.
விளைவு இடுப்பில் நன்றாக சுளுக்கு பிடித்து விட்டதாம். உடனே தாராள மனதுடன் ஹீரோ நான் வைத்தியம் செய்கிறேன் என கேராவனுக்கு அழைத்து சென்று ட்ரீட்மென்ட் கொடுத்திருக்கிறார்.
இதுதான் இப்போது திரையுலக வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. ஏக்கனவே இரண்டு பாகங்களுக்கும் சேர்த்து ஐந்து வருடம் ஆகிவிட்டது. இந்த கேப்பில் நடிகருக்கு நடிகையுடன் நன்றாகவே கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகிவிட்டதாம்.
அதனால் கதையில் கூட சில மாற்றங்களை கொண்டு வரச் சொல்லி இயக்குனரிடம் அடம் பிடித்து இருக்கிறார் நடிகர். இதெல்லாம் எங்க போய் முடிய போகுதோ என திரையுலகில் சத்தம் இல்லாமல் கிசுகிசுத்து வருகின்றனர்.