பிரபுதேவாவையும் விட்டுவைக்காத நயன்தாரா.. அப்போ பிரிவுக்கு காரணம் இது தானா
நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி தங்கள் காதலின் சின்னமாக Nayanthara Beyond The Fairy Tale என்ற ஒரு ஆவணப்படத்தை எடுக்க திட்டமிட்டு சில நாட்களுக்கு முன் தங்களுடைய ஆவணப்படத்தின் டிரைலர் வீடியோவை வெளியிட்டனர்.
இதற்கு பல சர்ச்சைகள் மற்றும் எதிர்ப்புகள் எழுந்தாலும் இன்று நயன்தாராவின் 40 - வது பிறந்தநாளை கருத்தில் கொண்டு இந்த ஆவணப்படும் வெளியாகி உள்ளது.
நயன்தாரா பிரபுதேவா இயக்கத்தில் வில்லு என்ற படத்தில் நடித்ததன் மூலம் அவர்களுக்குள் காதல் ஏற்பட்டது. ஆனால், பிரபுதேவா ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதால் பெரும் சர்ச்சையில் நயன்தாரா சிக்கினார்.
இருப்பினும் நயன்தாராவுக்கு பிரபுதேவா மீது உள்ள காதல் சற்றும் குறையாமல் இருந்தது. அவருக்காக நயன் பல விஷயங்களை செய்தார். ஆனால் திடீரென இந்த ஜோடி பிரிந்து விட்டதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், ஆவணப்படத்தில் நயன்தாரா அவருக்கு ஏற்பட்ட இரண்டு காதல் தோல்வி குறித்தும் அதன் காரணம் குறித்தும் பேசி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.
அதில், " எனக்கு நடிப்பு தான் எல்லாமே என்பது அனைவரும் அறிந்த ஒன்று ஆனால் "நான் சீதையாக நடித்ததுதான் கடைசி படமாக இருக்கும் என பயந்தேன் அப்போது எனக்கு ஒரு மாதிரி இருந்தது.
நடிப்பை நிறுத்த வேண்டும் என்பது என் ஆசை இல்லை ஆனால் அந்த நபர் எனக்கு வேறு சாய்ஸே கொடுக்கவில்லை நான் வேலை செய்ய கூடாது என்று சொன்னார். பின் தான் அது எவ்வளவு பெரிய தப்பு என்று உணர்ந்துகொண்டேன்" என்று கூறியுள்ளார்.
இதற்கு ரசிகர்கள் நயன்தாரா பிரபுதேவாவை தான் மறைமுகமாக கூறுகிறார் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்