ஒரேவொரு தமிழ் படத்துக்கு 5 தயாரிப்பாளருடன் அட்ஜெஸ்மெண்ட்.. நடிகை ஸ்ருதி ஹரிஹரன்..
கேரளாவை சேர்ந்த நடிகைகள் பலர் தங்களுக்கு நடந்த பாலியல் இன்னல்கள் குறித்து ஹேமா கமிட்டி மூலம் பல உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தனர். இதுகுறித்து பல நடிகைகள் வாய்த்திறந்து பேசி வரும் நிலையில் நடிகை ஸ்ருதி ஹரிஹரன் சமீபத்தில் ஒரு அதிர்ச்சி தகவலை கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.
ஏற்கனவே நடிகர் அர்ஜுன் சார்ஜா மீது புகார் அளித்து அதை நிரூபிக்கப்படாத காரணத்தால் அந்த வழக்கை தள்ளுபடி செய்திருந்தனர். இதனையடித்து தற்போது 5 தமிழ் பட தயாரிப்பாளர்கள் தனக்கு வலை விரித்ததாக கூறியிருக்கிறார்
4 வருடத்திற்கு முன் ஒரு முன்னணி தமிழ் தயாரிப்பாளர் தன்னுடைய கன்னட படத்தின் உரிமையை வாங்கி தன்னை தொடர்பு கொண்டு தமிழ் பதிப்பில் கதாநாயகியாக நடிக்க வைக்க விரும்புவதாக கூறினார்.
வாய்ப்பு கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கும் போது இந்த படத்தில் மொத்தம் 5 தயாரிப்பாளர்கள் இருக்கிறார்கள். அவர்கள் அனைவரும் விரும்பும் போதெல்லாம் நான் அவர்களுடன் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய வேண்டும் என்ற நிபந்தனையை கூறினார்.
அதற்கு நான் மிகவும் கோபமாக, இதுபோன்ற எண்ணத்துடன் என்னிடம் அனுகினால் என் செருப்பின் சக் தி என்ன என்பதை நீங்கள் பார்க்க வேண்டியிருக்கும் என்று கூறியதில் இருந்து தமிழ் சினிமாவில் எனக்கு வரும் வாய்ப்புகள் குறைந்துவிட்டதாக ஸ்ருதி ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.