பாவனாவுடன் தகாத உறவில் இருந்தேன்… வைரலாகும் முன்னணி இயக்குனரின் சர்ச்சை பேச்சு..!
தமிழில் சித்திரம் பேசுதடி என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகை பாவனா. முதல் படமே மாபெரும் வெற்றி பெற்ற நிலையில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக மாறினார் நடிகை பாவனா.
அதனை தொடர்ந்து வெயில், தீபாவளி, ஜெயம் கொண்டான், அசல் ஆகிய திரைப்படங்களில் நடித்து இவருக்கென ஏராளமான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கினார். இவர் தமிழ் மட்டுமின்றி மலையாளம், கன்னடம் போன்ற பிற மொழி படங்களிலும் நடித்து பிரபலமானவர்.
2017-ஆம் ஆண்டு படப்பிடிப்பு முடிந்து கொச்சிக்குத் திரும்பியபோது பாவனா காரில் கடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நடிகர் திலீப், பல்சர் சுனி ஆகியோர் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டனர். அதனை தொடந்து 74 நாட்கள் சிறையில் இருந்த அவர்கள் ஜாமீனில் வெளிவந்தனர். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு திருமணமாகி குடும்ப வாழ்க்கையில் நுழைந்தார்.
இந்நிலையில், இயக்குனர் மிஷ்கின் சித்திரம் பேசுதடி படம் வந்த புதிதில் கல்லூரி விழா ஒன்றில் கலந்துக்கொண்டு பேசியபோது, இந்த படத்தின் மூலம் நீங்கள் எந்த விஷயத்திற்கு சந்தோசம் அடைந்தீர்கள் என்ற கேள்விக்கு, “நான் பாவனாவுடன் இருந்த அந்தரங்க உறவு தான்” என்னுடைய சந்தோஷம் என்று கூறினார். பல வருடத்திற்கு முன் பேசப்பட்ட இந்த செய்தி தற்போது மீண்டும் வைரலாகி வருகிறது.