டைட்டில் வின்னர் காதலர், சர்ச்சையில் சிக்கிய தயாரிப்பாளர்... வெளியே கசிந்த பிக்பாஸ் 8 போட்டியாளர்களின் விபரம்
தமிழ் சின்னத்திரையில் ரசிகர்களின் மொத்த கவனமும் பிக்பாஸ் 8வது சீசன் மேல் தான் உள்ளது.
வரும் இறுதியில் அல்லது அக்டோபர் ஆரம்பத்தில் நிகழ்ச்சி தொடங்கலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அதிலும் 7 சீசன்களை வரை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய கமல்ஹாசன் இந்த 8வது சீசனை தொகுத்து வழங்கப்போவதில்லை.
எனவே அவருக்கு பதில் இனி பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவது விஜய் சேதுபதி என உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பிக்பாஸ் 8வது சீசனின் போட்டியாளர்கள் குறித்து நிறைய தகவல்கள் சமூக வலைதளங்களில் வலம் வந்த வண்ணம் உள்ளது. இந்த நிலையில் சில போட்டியாளர்கள் பற்றிய விவரம் உறுதியாகியுள்ளது.
கடந்த 7வது சீசனின் டைட்டிலை வென்ற அர்ச்சனாவின் காதலர் என்று கூறப்படும், சீரியல் நடிகருமான அருண் இந்த 8வது சீசனில் கலந்துகொள்ள இருக்கிறார் என்கின்றனர்.
அதேபோல் ஒவ்வொரு பிக்பாஸ் சீசனையும் விமர்சனம் செய்யும் தயாரிப்பாளரும், நடிகருமான ரவீந்தர் சந்திரசேகர் ஒரு போட்டியாளர் என்கின்றனர்.
பின் சீரியல் நடிகரும், தொகுப்பாளருமான தீபக், குக் வித் கோமாளி நிகழ்ச்சி புகழ் ஷாலின் சோயா ஆகியோரும் இந்த 8வது சீசனின் போட்டியாளர்கள் என செய்தி கசிந்துள்ளது.