விஜய்சேதுபதி, அரவிந்த் சாமி நடிப்பில் 35 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு 'பேசும் படம்'

விஜய்சேதுபதி, அரவிந்த் சாமி நடிப்பில் 35 ஆண்டுகள் கழித்து மீண்டும் ஒரு 'பேசும் படம்'

உலகநாயகன் கமலஹாசன் கடந்த 1987ஆம் ஆண்டு ’பேசும் படம்’ என்ற வசனமே இல்லாத படத்தில் நடித்த நிலையில் தற்போது 35 ஆண்டுகள் கழித்து மீண்டும் அதே போன்ற ஒரு ’பேசும் படம்’ உருவாகவுள்ளது.

விஜய் சேதுபதி, அரவிந்தசாமி, அதிதிராவ் ஹைத்ரி ஆகிய மூவரும் மணிரத்னம் இயக்கிய ’செக்கச் சிவந்த வானம்’ என்ற படத்தில் இணைந்து நடித்த நிலையில் இதே மூவர் தற்போது ’காந்தி டாக்ஸ்’ என்ற படத்தில் மீண்டும் இணைந்துள்ளனர். மராத்திய இயக்குனர் கிஷோர் பாண்டுரங் பெலகர் எனப்வர் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் வசனமே இல்லை என்பதுதான் புதிய முயற்சி.

சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் கமல்ஹாசன் அமலா நடிப்பில் உருவான ‘பேசும் படம்’ மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில் ’காந்தி டாக்ஸ்’ படமும் அதே போன்ற ஒரு வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சீரியஸான சமூக பிரச்சனைகளை நகைச்சுவையுடன் கேலியும் கிண்டலுமாக உருவாக்கப்பட இருக்கும் இந்த திரைப்படத்தை ஜீ ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கிறது என்பதும் இசைப்புயல் ஏஆர் ரகுமான் இசையமைக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2021 ஆம் ஆண்டு திட்டமிடப்பட்டிருந்த இந்தப்படம் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஒத்திவைக்கப்பட்டு தற்போது படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இந்த படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES