படம் எப்படிலேட்டஸ்ட்

V1 திரைவிமர்சனம்

வெற்றி பெற்ற இயக்குனர்களின் உதவியாளர்கள் சிலர் நல்ல கதைகளோடு புதிய இயக்குனர்களாக களத்தில் அறிமுகமாகிறார்கள். அதில் ஒருவராக பாவல் நவகீதன். மெட்ராஸ், குற்றம் கடிதல், பேரன்பு படங்களில் நடிகராக இவரை நீங்கள் பார்த்திருப்பீர்கள் தானே. V1 மூலம் அவர் இயக்குனராக சொல்லும் சேதி என்ன என பார்க்கலாம்.

கதைக்களம்

ஹூரோ ராம் அருண் திறமையான போலிஸ் அதிகாரியாக இருந்தும் சில காரணங்களால் அந்த வேலை வேண்டாம் என நுட்பமான துப்பறியும் அதிகாரியாக மாறுகிறார். அவருக்கு தோழியாக தைரியமான போலிஸ் பெண் அதிகாரியாக நடிகை விஷ்ணுப்பிரியா. இடையே ராம் வாழ்க்கையில் ஒரு பெரும் இழப்பு.

லிஜேஷின் மனைவியாக சீரியல் நடிகை காயத்திரி. இதில் இருவருக்கும் சண்டை சச்சரவு. வேலைக்கு சென்று இரவில் வீட்டிற்கு திரும்பிய போது காயத்திரி பிணமாக கிடக்கிறார். இந்த சம்பவம் போலிஸ் கவனத்திற்கு வருகிறது. பின் விஷ்ணு பிரியாவின் கைக்கு வருகிறது இந்த V1 கொலைக்குற்ற வழக்கு.மிகவும் சவாலாக இருக்கும் இந்த வழக்கில் குற்றவாளியை கண்டுபிடிக்க நண்பர் ராமின் உதவியை நாடுகிறார்.அவர் இந்த வேலையே எனக்கு வேண்டாம் என தூக்கி போட திடுக்கிட வைக்கும் வகையில் Vl வழக்கை மீண்டும் கையில் எடுக்கிறார். விசாரணையை அவர் ஸ்மார்டாக தொடங்க அடுத்தடுத்த துப்பு கிடைக்கிறது. இதில் காயத்திரி மரணத்தின் பின்னணி என்ன? ராம் தன் வாழ்க்கையில் இழந்தது என்ன என்பதே இந்த V1.

படத்தை பற்றிய அலசல்

ராம் அருண் நிஜ போலிஸ் அதிகாரி போலவே தோற்றத்தில் பார்ப்போரை ஈர்க்கிறார். டென்சனான போலிஸ் வேலையில் இப்படியும் ஒரு நபரா என சற்று ஆச்சர்யம். கொலைப்பின்னணியை கையில் எடுத்து களத்தில் இறங்கி ஆக்‌ஷனுடன் அவர் செயலாற்றும் விதம் சக போலிஸிடமிருந்து சற்று வித்தியாசம்.விஷ்ணு பிரியாவின் அழகாக பேச்சினாலும், மிரட்டலாக பேசினாலும் மலையாள சாயலில் நன்றாக தெரிகிறது. ராமுடன் அவர் சக அதிகாரி போல இல்லாமல் நண்பராக அணுகும் விதம் படம் பார்க்கும் போது பலருக்கும் இவர் அவரின் காதலியோ என தோன்றலாம்.

கொலையான காயத்திரியை எங்கோ பார்த்திருக்கிறோமே என தோன்றலாம் சரிதானே. பேரழகி சீரியல் மூலம் மக்கள் மனம் கவர்ந்த இவர் படத்தில் இறங்கியுள்ளார். பரியேறும் பெருமாள் படத்தின் மூலம் சற்று அதிகம் அறியப்பட்டவர் லிஜேஷ் கடைசி வரை கேள்விக்குறியாக செல்லும் கேரக்டர். இயல்பான நடிப்பு.

இயக்குனர் வெற்றி மாறனிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய பாவல் நவகீதன் ஆக்‌ஷன் கதையோடு அதிரடி காட்டுகிறார். முயற்சிக்கு நன்றி. முதல் பாதி வேகமாக போனாலும் 2 ம் பாதியில் கொஞ்சம் தளர்வு.

ஏதோ மிஸ் ஆவது போல ஒரு ஃபீல் இருந்தாலும் இறுதியில் நல்ல மெசேஜ்.

கிளாப்ஸ்

ரியல் போலிஸாக ஹீரோ ராம் அருணின் மதி நுட்பம்.

கடைசி வரை செல்லும் குற்றவாளி யார் என்னும் மர்மம்.

பல்ப்ஸ்

சம்மந்தமில்லாமல் பிரியாவை குற்றவாளி போல காட்டியது.

மொத்தத்தில் V1 விறுவிறுப்பான ஆக்‌ஷன் மர்டர்.

Tags

Related Articles

Close