தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

RRR படத்தில் ஜூனியர் என்.டி.ஆரின் அறிமுக காட்சிக்கு மட்டும் இத்தனை கோடியா?

பாகுபலியின் இரண்டு பாகங்களை தொடர்ந்து எஸ்.எஸ்.ராஜமௌலியின் இயக்கத்தில் மிக பிரமாண்டமாக உருவாகிவரும் படம் RRR. இப்படத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் என இரு ஹீரோக்கள்.

ராம் சரணிற்கு ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை ஆலியா பட் நடித்து வருகிறார். ஜூனியர் என்.டி.ஆருக்கு ஜோடியாக நடிக்க வைக்க பிரபல ஹாலிவுட் நடிகை ஒருவர் அழைத்து வரப்பட்டார். ஆனால் சில காரணங்களால் அவர் விலகி கொள்ள அவரது இடத்திற்கு வேறொரு நடிகையை தேடி வருகின்றனர்.

இந்நிலையில் இப்படத்தில் ஜூனியர் என்.டி.ஆரின் அறிமுக 15 நிமிட காட்சிக்கு மட்டும் ரூபாய் 20 கோடி செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. படத்தின் மொத்த பட்ஜெட் ரூ.350-400 கோடி என்பதால் அறிமுக காட்சிக்கு மட்டும் இத்தனை கோடியில் செலவாம்.

Related Articles

Close