ரகசியத்தை உடைத்த பிக்பாஸ் சுரேஷ் தாத்தா! பல வருடங்களுக்கு பின் மீண்டும்! வீடியோ இதோ

ரகசியத்தை உடைத்த பிக்பாஸ் சுரேஷ் தாத்தா! பல வருடங்களுக்கு பின் மீண்டும்! வீடியோ இதோ

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 வந்த சில நாட்களிலேயே மக்களிடம் அன்பை பெற்றவர் சுரேஷ் சக்ரவர்த்தி. பிக்பாஸ் வீட்டில் இருந்தவர்களுக்கு வேண்டுமானால் அவரை பிடிக்காமல் இருந்திருக்கலாம். ஆனால் வெளியில் அவரை பிடிக்காதவர்கள் இல்லை.

அவரின் குறும்புத்தனமும், பேச்சும், செயலும் மக்களுக்கு நல்ல பொழுதுபோக்காக அமைந்தன. கேப்ரியல்லா மற்றும் பாலாவுடன் அவருக்கு நல்ல பாச பிணைப்பு உறவு இருந்ததை மறக்க முடியாது.

சினிமா படங்கள், டிவி நிகழ்ச்சிகளில் நடிப்பு, தயாரிப்பு, இயக்கம் என ஒரு காலத்தில் பணியாற்றி வந்த சுரேஷ் சக்ரவர்த்தி மீண்டும் படத்தில் எப்போது வருவார் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அவரும் சூசகமாக அதை கூறிவந்தார். தற்போது அந்த ரகசியத்தை உடைத்துள்ளார்.

நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்த அர்ஜூன் சிதம்பரம் நடிக்கும் படத்தில் முக்கிய வேடத்தில் தான் நடிப்பதாக சுரேஷ் வீடியோவில் கூறியுள்ளார். துஷாரா இதில் ஹீரோயினாக நடிக்கிறார்.

அர்ஜூன் சிதம்பரம் தற்போது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறாராம்.

மேலும் துப்பறிவாளன் 2 படத்தில் நடித்திருந்த அவர் வசந்த பாலன் இயக்கத்திலும் நடிக்கவுள்ளாராம்.

LATEST News

Trending News

HOT GALLERIES