தூங்கா கண்கள்

தூங்கா கண்கள்

கோல்டன் ஸ்டார் சினிமாஸ் மற்றும் வெற்றி பிலிம்ஸ் தயாரிப்பில் "கைதி" ஜார்ஜ் மகன் அறிமுகமாகும் "தூங்கா கண்கள்". இந்த படத்தில் ஜார்ஜ் மகன் பிரிட்டோ அறிமுகமாகிறார். துரை சுதாகர், த.வினு நிக்கேஷ் ஆகியோருடன் அப்ஷரா, ரேஷ்மா கேரளா புதுவரவுகள் நாயகிகளாக அறிமுகமாகிறார்கள். 

 

70 வருடங்களுக்கு முன் திருவாங்கூர் சமஸ்தானத்தில் நடந்த சம்பவத்தை அடிப்படயாக வைத்து உருவாகியிருக்கும் படம் "தூங்கா கண்கள்". இந்த திரைப்படத்தில் இதுவரை தமிழ் சினிமா பார்க்காத ஒரு விஷயம் சொல்லப்பட்டிருக்கிறது. 

 

தென் தமிழகத்தில் "வாதை" என்று அழைப்பார்கள். இந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து சஸ்பென்ஸ், திரில்லர், ஹாரர் கலந்து த.வினு உருவாக்கியிருக்கும் படம் "தூங்க கண்கள்". கைதி படத்தின் வெற்றிக்கு பிறகு ஜார்ஜ் படம் முழுக்க நடித்திருக்கும் படம் இது.  செங்கோட்டை, நாகர்கோவில், சென்னை மற்றும் கேரளா ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு நிறைவு பெற்றது.

LATEST News

Trending News

HOT GALLERIES