ஷாஹித் கபூருடன் இணையும் விஜய் சேதுபதி!

ஷாஹித் கபூருடன் இணையும் விஜய் சேதுபதி!

அமேசான் ப்ரைம் தயாரிக்கும் இந்தி வெப் சீரிஸில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தமாகியுள்ளார். இதன் படப்பிடிப்பு 2021-இல் தொடங்குகிறது. தமிழில் முன்னணி நடிகராக வலம்வரும் விஜய் சேதுபதி தொடர்ந்து அதிகமான படங்களில் நடித்து வருகிறார். தற்போதைக்கு மட்டும் அவரது நடிப்பில் மாஸ்டர், மாமனிதன், துக்ளக் தர்பார், காத்துவாக்குல ரெண்டு காதல் என ஏகப்பட்ட படங்கள் வரிசைகட்டி நிற்கின்றன. 
தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாள சினிமாவிலும் விஜய் சேதுபதி பயணிக்க தொடங்கிவிட்டது நமக்கு தெரியும். இந்நிலையில், அமேசான் ப்ரைம் தளத்திற்காக உருவாகும் புதிய வெப் சீரிஸில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார்.

முன்னணி பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூருடன் இதில் விஜய் சேதுபதி நடிக்கிறார். க்ரிஷ் - டீகே இந்த தொடரை உருவாக்குகிறார்கள். மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில் மாளவிகா மோகனன் நடிக்கிறார்.

இப்போது அறிவிப்பு மட்டும் வெளியாகியிருக்கும் இதன் பணிகள் 2021-இல் தொடங்குகின்றன.

LATEST News

Trending News

HOT GALLERIES