'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தில் நடிக்கும் அனிருத்!

'காத்துவாக்குல ரெண்டு காதல்' படத்தில் நடிக்கும் அனிருத்!

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தில் உள்ளது என்பதும் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடியும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் ஏற்கனவே ரிலீஸ் ஆன நிலையில் வரும் 18ஆம் தேதி இரண்டாவது சிங்கிள் பாடல் ரிலீஸ் ஆக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. Two Two Two என்று ஆரம்பிக்கும் இந்த பாடலை அனிருத் கம்போஸ் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் இந்த பாடலில் அனிருத் நடித்துள்ளதாக சற்றுமுன்னர் விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றின் மூலம் தெரியவருகிறது. ஏற்கனவே ஒரு சில படங்களில் இடம் பெற்றுள்ள பாடல்களில் அனிருத் தோன்றி என்று நடனமாடி உள்ளார் என்பது தெரிந்ததே. அந்த வகையில் இந்த படத்திலும் அவரது நடனம் ரசிக்க வைக்கும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES