சூர்யா பட இசையமைப்பாளர் காலமானார்: திரையுலகினர் இரங்கல்!

சூர்யா பட இசையமைப்பாளர் காலமானார்: திரையுலகினர் இரங்கல்!

நடிகர் சூர்யா படத்திற்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஒருவர் திடீரென காலமானது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சூர்யா நடித்த ’ஸ்ரீ’ என்ற திரைப்படம் கடந்த 2002ஆம் ஆண்டு வெளியானது. இந்த திரைப்படத்தை புஷ்பவனம் என்பவர் இயக்கி இருந்தார் என்பதும் டி.எஸ்.முரளிதரன் என்பவர் இசையமைத்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சூர்யா, ஸ்ருதிகா, காயத்ரி ஜெயராமன், விஜயகுமார், ஸ்ரீவித்யா உள்பட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இந்த படத்தின் இசையமைப்பாளர் டிஎஸ் முரளிதரன் சென்னையில் நேற்று காலமானார். இவர் ’கோத்தம்’ என்ற ஹிந்தி படம் உள்பட 10க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யா படத்திற்கு இசை அமைத்த டிஎஸ் முரளிதரன் அவர்களின் மறைவை கேட்டு கோலிவுட் திரையுலகினர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர் என்பதும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES