தன்னைவிட 5 வயது குறைந்த நடிகருடன் ஜோடி சேரும் நடிகை சமந்தா.. முதல் முறையாக இணையும் ஜோடி..

தன்னைவிட 5 வயது குறைந்த நடிகருடன் ஜோடி சேரும் நடிகை சமந்தா.. முதல் முறையாக இணையும் ஜோடி..

தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் மார்க்கெட் இலக்காதா கதாநாயகையாக விளங்கி வருபவர் நடிகை சமந்தா.

தற்போது இவரது நடிப்பில் சகுந்தலை புராண கதையை மைப்படுத்தி ' சகுந்தலம் ' எனும் தலைப்பில் சரித்திர படம் ஒன்று உருவாக இருக்கிறது.

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகியிருக்கும் இப்படத்தை குணசேகர் இயக்குகிறார்.

இந்நிலையில் இப்படத்தில் முதல் முறையாக தன்னை விட 5 வயது குறைந்த நடிகருடன் ஜோடி சேர இருக்கிறார் நடிகை சமந்தா.

சகுந்தலம் படத்தில் சகுந்தலா கதாபாத்திரத்தில் நடிக்கும் சமந்தாவிற்கு ஜோடியாக, துஷ்யந்தன் கதாபாத்திரத்தில் நடிக்க மலையாள இளம் நடிகர் தேவ் மோகன் ஒப்பந்தமாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

33 வயதும் நடிகை சமந்தா தன்னைவிட 5 வயது குறைவான 28 வயது இளம் நடிகருடன் நடிக்க இருக்கிறார் என்று திரையுலக வட்டாரத்தில் கிசுகிசுப்படுகிறது.

LATEST News

Trending News

HOT GALLERIES