கோடி கணக்கில் நஷ்ட ஈடு கேட்ட மாஸ்டர் பட தயாரிப்பாளர், நோட்டீஸ் அனுப்பியதால் பரபரப்பு..!

கோடி கணக்கில் நஷ்ட ஈடு கேட்ட மாஸ்டர் பட தயாரிப்பாளர், நோட்டீஸ் அனுப்பியதால் பரபரப்பு..!

தளபதி விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் தான் மாஸ்டர்.

இப்படம் கடந்த 13 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது, மேலும் வெளியான முதல் மூன்று நாட்களிலே 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில் இப்படம் வெளியாவதற்கு 2 நாட்களுக்கு முன் இப்படத்தின் முக்கிய காட்சிகள் இணையத்தில் லீக் ஆனது.

அதன்பின் படக்குழுவின் அதிரடி நடவடிக்கையால் இப்படத்திற்காக டிஜிட்டல் பணிபுரிந்த நிறுவனம் ஒன்றின் ஊழியர் ஒருவர் தான் இந்த காட்சிகளை இணையத்தில் லீக் செய்தவர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனிடையே தற்போது மாஸ்டர் படத்தின் இணைத் தயாரிப்பாளர் லலித்குமார் சம்பந்தப்பட்ட அந்த டிஜிட்டல் நிறுவனத்திற்கு ரூபாய் 25 கோடி நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

LATEST News

Trending News

HOT GALLERIES