மீண்டும் இணைந்த கவின் மற்றும் லாஸ்லியா, பிக்பாஸ் சக்ஸஸ் பார்ட்டியில் எடுக்கப்பட்ட புகைப்படம்..இதோ.

மீண்டும் இணைந்த கவின் மற்றும் லாஸ்லியா, பிக்பாஸ் சக்ஸஸ் பார்ட்டியில் எடுக்கப்பட்ட புகைப்படம்..இதோ.

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மக்களின் பேராதரவை பெற்று நேற்றுடன் நிறைவடைந்தது, மேலும் இந்த சீசனில் இதுவரை இல்லாத அளவில் ஆரி அதிக வாக்குகளை பெற்று வெற்றியடைந்துள்ளார்.

அதுமட்டுமின்றி ஆரி 16 கோடியே 50 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளை பெற்று பெரிய வெற்றியை அடைந்துள்ளார்.

அவருக்கு அடுத்தபடியான இடத்தில் இருக்கும் பாலாஜி முருகதாஸ் 6 கோடியே 14 லட்சம் வாக்குகளை பெற்று இரண்டாம் இடத்தை பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் பிக்பாஸ் பைனல்ஸ் நிகழ்ச்சி முடிந்தவுடன் போட்டியாளர்கள் மற்றும் பல நட்சத்திரங்கள், பிக்பாஸ் நிகழ்ச்சியின் சக்ஸஸ் பார்ட்டியில் கலந்து கொண்டுள்ளனர்.

அப்போது பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களான லாஸ்லியா மற்றும் கவின் கலந்து கொண்டுள்ளனர். அந்த புகைப்படங்களும் தற்போது வெளியாகியுள்ளது.

Image

Image

LATEST News

Trending News

HOT GALLERIES