கடற்கரை மணலில் 'கடல் கன்னி' தோற்றத்தில் பிக்பாஸ் தமிழ் நடிகை!

கடற்கரை மணலில் 'கடல் கன்னி' தோற்றத்தில் பிக்பாஸ் தமிழ் நடிகை!

பிக்பாஸ் தமிழ் சீசன் 1 போட்டியாளர்களில் ஒருவரும் தமிழ் திரைப்பட நடிகையுமான ரைசா வில்சன் கடற்கரை மணலில் கடல்கன்னி தோற்றத்தில் பதிவு செய்துள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது

பிக்பாஸ் சீசன் 1 போட்டியார்களில் ஒருவரான ரைசா வில்சன், அந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் ஹரிஷ் கல்யாண் உடன் ’பியார் பிரேமா காதல்’ என்ற திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து பாலாவின் ’வர்மா’ உள்பட ஒரு சில படங்களில் நடித்தார். தற்போது அவர் ஒரே நேரத்தில் ஐந்து திரைப்படங்களில் நடித்து பிசியான நடிகையாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் ரைசா வில்சனுக்கு ஒன்றரை மில்லியன் ஃபாலோயர்கள் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் சமீபத்தில் ரைசா தனது இன்ஸ்டாவில் கடற்கரை மணலில் உட்கார்ந்து கொண்டிருக்கும் மற்றும் படுத்துக் கொண்டிருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்தில் ’கடல் கன்னி’ உணர்வு வருவதாக அவர் கேப்ஷன் கொடுத்துள்ளார். இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ்களும், கமெண்ட்ஸ்களும் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

LATEST News

Trending News

HOT GALLERIES