கல்யாணம் பண்ணிக்கலாம் என 80 லட்சம் வாங்கிக் கொண்டு இளம் பெண்ணை ஏமாற்றிய ஆர்யா.. அதிர்ச்சியில் சாயிஷா!

ஆர்யா காதல் விவகாரங்களில் சிக்கி கொள்வது ஒன்றும் புதிதல்ல. தன்னுடைய ஆரம்பகால கட்டத்திலிருந்து தன்னுடன் நடித்த பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டார்.

ஆர்யா காதல் விவகாரங்களில் சிக்கி கொள்வது ஒன்றும் புதிதல்ல. தன்னுடைய ஆரம்பகால கட்டத்திலிருந்து தன்னுடன் நடித்த பல நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டார். ஏன் சமீபத்தில் கூட கலர் தொலைக்காட்சியில் 16 பெண்களுடன் ஜெக ஜோதியாக ஒரு நிகழ்ச்சியில் வலம் வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால் அதன் பிறகு கஜினிகாந்த் படத்தில் நடித்த போது நடிகை சாயிஷா மீது காதல் ஏற்பட்டு அதை அவரது தாயாரிடம் கூறி அவசர அவசரமாக திருமணமும் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு இருவரது வாழ்க்கையிலும் எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் சுமூகமாக சென்று கொண்டிருந்தது.

சாதாரண நடிகர்கள் குடும்பத்தில் கூட இவ்வளவு பிரச்சனை வரும்போது பிளேபாய் நடிகரான ஆர்யா வீட்டில் இன்னும் பிரச்சனை வரவில்லையே என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்த நேரத்தில் கடல்கடந்து அதிரடியாக வந்துள்ளது ஆர்யா ஏமாற்றிய கதை.

 

arya-sayyesha-cinemapettai

arya-sayyesha

ஆர்யா ஜெர்மனியை சேர்ந்த ஒரு பெண்ணிடம் 80 லட்சம் வரை பணம் வாங்கிக் கொண்டு திருமணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டாராம். இந்த செய்தி தான் தற்போது கோலிவுட் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் அந்தப் பெண் சும்மா ஒன்றும் புகார் செய்யவில்லை. அதற்கான ஆதாரங்களை புட்டுப்புட்டு வைத்துள்ளார். மேலும் ஆர்யாவுடன் சேர்ந்து கொண்டு ஆர்யாவின் தாயாரும் அந்த பெண்ணை ஏமாற்றியதாக குற்றம் சாட்டியுள்ளார்.

இதன் காரணமாக தற்போது ஆர்யா மற்றும் சாயிஷா இடையே சின்ன சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இருந்தாலும் ஆர்யா விவரமானவராச்சே, இதற்கும் ஏதாவது ஒரு கதை வைத்திருப்பார் என்கிறார்கள் கோலிவுட் வாசிகள்.

LATEST News

Trending News

HOT GALLERIES