பாலிவுட் சினிமாலேட்டஸ்ட்

890 நாட்கள் ஓடிய சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறதா?

ரஜினி நடித்த படங்களில் ரசிகர்களால் மிகவும் கொண்டாடப்பட்ட படம் சந்திரமுகி. ரஜினியுடன், பிரபு, ஜோதிகா, நயன்தாரா, வடிவேலு, நாசர் என பலர் நடித்திருந்த இப்படம் வசூல் மட்டுமில்லாது ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்று சுமார் 890 நாட்கள் ஓடியது. தற்போது இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் தமிழில் இல்லை, ஹிந்தியில்.

பூ புல் புலையா என்ற பெயரில் 2007ல் வெளியாகியிருந்த இப்படம் அங்கயும் செம்ம ஹிட். இதனால் இப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான கதையுடன் பர்ஹத் சாம்ஜி என்பவர் தயாரிப்பாளர் பூஷன் குமாரை அணுகி கதையை சொல்லியுள்ளார். பூஷனுக்கும் இக்கதை பிடித்துவிட்டது. இதனால் இந்த இரண்டாம் பாகத்தை தயாரிக்கும் வேலை ஆரம்பமாகவுள்ளதாம். ஆனால் இப்படத்தின் முதல் பாகத்தில் நடித்த அக்சய்குமார், வித்யாபாலன் இரண்டாம் பாகத்திலும் நடிப்பார்களா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Image result for bhool bhulaiyaa

Related Articles

Close