கோலிவுட் செய்திகள்லேட்டஸ்ட்

6 மாதங்களில் 50 படங்கள் மட்டுமே ரிலீஸ்

தமிழ் சினிமா உலகில் அடுத்துள்ள ஆறு மாதங்களில் ஓடிடி தளங்களைத் தவிர சினிமா தியேட்டர்களில் புதிய படங்கள் வெளியாகுமா என்பது இன்னமும் புரியாத புதிராகவே உள்ளது.

கொரோனா தொற்று அடுத்த ஆறு மாதங்களுக்குள்ளாக முழுமையாகக் குறைந்தால் மட்டுமே தியேட்டர்கள் திறக்கப்படும் என்று தெரிகிறது. அடுத்த மூன்று மாதங்களில் கொரோனா தொற்று சரியானால் கூட தியேட்டர்களுக்கு மக்கள் வருவார்களா என்பதும் சந்தேகம்தான்.

கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ் சினிமாவில் வெளியான படங்களின் எண்ணிக்கை 200ஐத் தாண்டியது. அது இந்த ஆண்டில் 100ஐத் தாண்டினாலே பெரிய விஷயம்தான்.
இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் வெளிவந்த படங்களின் எண்ணிக்கை 50 மட்டுமே. அதில் கடைசியாக வந்த நான்கு படங்கள் ஓடிடி தளங்களில் வெளியானவை. மேலும், சில படங்கள் அடுத்தடுத்து ஓடிடி தளங்களில் வெளியாக உள்ளன. ஓடிடி தளங்களில் மாதத்திற்கு நான்கு படங்கள் வெளியானால் கூட ஆறு மாதங்களில் 24 படங்கள் மட்டுமே வெளியாகும்.

ஒருவேளை அக்டோபருக்குப் பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட்டால் கூட முன்பைப் போல வாரத்திற்கு நான்கைந்து படங்கள் வெளிவர வாய்ப்பில்லை. அது போல அனைத்துத் தியேட்டர்களும் திறக்கப்படும் சூழ்நிலையும் இருக்காது.

திரையுலகத்தில் உள்ள ஒவ்வொருவருமே இந்த நிலைமை சீக்கிரமே சீரடைய வேண்டும் என்று பிரார்த்திப்பதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாத நிலையில்தான் உள்ளனர்.
Related Articles

Close