கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாபாலிவுட் சினிமாலேட்டஸ்ட்ஹாலிவுட் சினிமா

கர்ப்பமாக இருப்பது எனக்கே இவ்வளவு நாள் தெரியாது! குழந்தை பிறந்ததும் இது நிச்சயம் நடக்கும்: எமி ஜாக்சன் பேட்டி

நடிகை எமி ஜாக்ஸன் தன் காதலருடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்டிருப்பதாக சென்ற வருடம் அறிவித்தனர். அவர்கள் திருமணம் பற்றி திட்டமிட்டு வருவதாக தெரிவித்தனர். ஆனால் சில நாட்கள் முன்பு எமி ஜாக்சன் திருமணத்திற்கு முன்பே கர்பமாக இருப்பதாக புகைப்படம் வெளியிட்டு பரபரப்பு ஏற்படுத்தினார்.

இது பற்றி பேசியுள்ள எமி ஜாக்சன், “உண்மையில் நான் கர்பமாக இருப்பது எனக்கே தெரியாது. 6 வாரங்கள் கழித்து தான் தெரிந்தது. இலங்கை, இந்தியா மற்றும் நியூ யார்க் என தொடர்ந்து உலகத்தை சுற்றிக்கொண்டிருந்தேன். கடினமாக இருந்தது.”

“என்ன நடக்கும் என்பது நம் கையில் இல்லை. ஆனால் ஒன்று மற்றும் நிச்சயம்.. ஆணோ பெண்ணோ குழந்தை பிறந்ததும் என்னுடன் அவன்/அவள் உலகம் சுற்ற வேண்டியதுதான். என் குடும்பத்தினரும் எனக்கு ஆதரவாக உள்ளனர்” நஎன எமி தெரிவித்துள்ளார்.

Related Articles

Close