பாலிவுட் சினிமாலேட்டஸ்ட்

2.0 நடிகர் அக்ஷய் குமார் வீட்டில் நள்ளிரவில் நடந்த அதிர்ச்சி சம்பவம் – போலீசார் தீவிர விசாரணை

பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார் கடைசியாக ஷங்கர் இயக்கிய 2.0 படத்தில் தான் நடித்திருந்தார். இந்த படம் மூலம அவருக்கு தமிழ்நாட்டிலும் அதிகம் ரசிகர்கள் வந்துள்ளனர்.

அவருக்கு வெறித்தனமான பல ரசிகர்கள் உள்ள நிலையில் அவரது வீட்டுக்குள் நேற்று நள்ளிரவு மர்ம நபர் ஒருவர் குதித்துள்ளார். அவரை பிடித்து போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

போலீஸ் விசாரணையில் அவர் ஹரியானா மாநிலத்தை சேர்ந்த அங்கித் கோஸ்வாமி என தெரியவந்தது. அவர் கூகுளில் அக்ஷய் குமாரின் வீட்டு விலாசத்தை அறிந்துகொண்டு உடனே அவரை பார்க்க வேண்டும் என மும்பை கிளம்பியுள்ளார்.

நள்ளிரவில் அக்ஷயை பார்க்கலாம் என நினைத்து சுவர் ஏறி குதித்ததாக தெரிவித்துள்ளார். வேறு எந்த தீய எண்ணமும் இல்லை என அவர் கூறியுள்ளார். இதுபற்றி அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Articles

Close