ஆல்பம்லேட்டஸ்ட்

10 கிலோ வரை உடல் எடையை குறைத்து ஸ்லிமாக மாறிய பிக் பாஸ் ஷெரின், அழகிய புகைப்படம் இதோ..

உலக நாயகன் கமல் ஹாசன் அவர்கள் முன் நின்று தொகுத்து வழங்கிய மாபெரும் நிகழ்ச்சி பிக் பாஸ்.

இதில் 3ஆம் சீசன் சென்ற வருடம் நடைபெற்று வெற்றிகரமாக முடிந்தது. இதில் மலேசியாவை சேர்ந்த முகம் ராவ் முதல் பரிசை வென்று டைட்டீல் வின்னர் ஆனார்.

மேலும் இந்த சீசனில் கலந்து கொண்ட கவின், லாஸ்லியா, தர்ஷன், ஷெரின் என பலரும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றனர்.

குறிப்பாக இதில் ஷெரினுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து, இவருகென்றே தனி ரசிகர்கள் பட்டாளம் சமூக வலைதளங்களில் குவிந்தது.

இதனால் இவர் ஃபைனல் வரை சென்று 4 ஆம் இடத்தை பிடித்தார். மேலும் பலாயிரம் ரசிகர்களையும் தன்வசம்படுத்தி கொண்டார்.

வீட்டை விட்டு வெளியே வந்த பிறகும் கூட தனது ரசிகர்களுடன் இணைந்தே இருக்க வேண்டும் என்று தனது சமூக வலைதள பக்கங்களில் தொடர்ந்து புகைப்படங்களை பதிவிட்டு வந்துகொண்டு இருக்கிறார்.

அந்த வகையில் தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தான் பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது அணிந்திருந்த உடையை தற்போது அணிந்துகொண்டு 10 கிலோ வரை உடல் எடையை நான் குறைதுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார் ஷெரின்.

மேலும் அந்த புகைப்படத்தை பார்த்த பல ரசிகர்கள் ஆச்சிரியப்படுள்ளன.

Related Articles

Close