லேட்டஸ்ட்ஹாலிவுட் சினிமா

ஹாலிவுட் படத்தில் நடிக்க விரும்பும் அனு இம்மானுவேல்

துப்பறிவாளன் படம் மூலம் தமிழில் அறிமுகமான அனு இம்மானுவேலுக்கு அதன் பின் இங்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை. ஆனால் தெலுங்கில் ரவி தேஜாவுடன் அமர் அக்பர் ஆண்டனி, நாகசைதன்யாவுடன் சைலஜா ரெட்டி அல்லுடு ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
சைலஜா படம் வரும் வாரம் வெளியாக இருக்கிறது. அமெரிக்கன் சிட்டிசனான அனு இம்மானுவேல் தென்னிந்திய மொழிகளின் முன்னணி ஹீரோக்களின் படத்தில் நடித்து வந்தாலும் தனது சிறு வயது ஆசையான ஹாலிவுட்டின் ஜேம்ஸ் ப்ராங்கோ படத்தில் நடிக்க வேண்டும் என்பதை கனவாகக் கொண்டிருக்கிறார்.
கையில் இருக்கும் படங்களின் படப்பிடிப்பு முடிந்தவுடன் தனக்கு மிகவும் விருப்பமான பாரிஸ், மிலன் நகரங்களுக்கு செல்லத் திட்டமிட்டிருக்கிறார். #AnuEmmanuel

Related Articles

Close