பாலிவுட் சினிமாலேட்டஸ்ட்

ஹாலிவுட் திரையுலகின் ‘ஜெம்ஸ் பாண்ட்’ கதாநாயகி மரணம்

ஜெம்ஸ் பாண்ட் படங்களில் 1964ஆம் ஆண்டு வெளியான கோல்டன் பிங்கர் படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றவர் நடிகை மார்கரெட் நோலன்.

ஆம் sean connery நடித்து வெளியான இப்படத்தில் மியாமி தீவின் தங்க மங்கை எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அப்போது இருந்து திரையுலகில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட கதாபாத்திரம் இதுவே.

திரையுலகில் சுமார் 50 படங்களில் நடித்துள்ள இவர், பல தொடர்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமின்றி ரசிகர்களால் திரையில் ரசிக்கப்பட்ட கதாநாயகியும் ஆவார் மார்கரெட் நோலன்.

76 வயதான மார்கரெட் நோலன் சில ஆண்டுகளுக்கு முன்பே சினிமாவில் இருந்து விலகி தனது குடும்பத்துடன் ஒய்வு பெற்று வந்த நிலையில், மருத்துவ சிகிச்சை பலனின்றி, வயது மூப்பு காரணமாக இன்று மரணமடைந்துள்ளார்.

இது அவரின் ரசிகர்களுக்கு ஹாலிவுட் திரையுலகிற்கு பெரும் அதிர்ச்சியை தந்துள்ளது. மேலும் இவரின் இறப்பிற்கு பலரும் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
Related Articles

Close