கோலிவுட் செய்திகள்திரைப்படம்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

ஹன்சிகா படத்தில் சிம்புவின் கதாபாத்திரம் என்ன? படத்தில் இவ்வளவு நேரம் சிம்புவின் சீன் இருக்கிறதாம்

சிம்பு மற்றும் நடிகை ஹன்சிகா இருவரும் ஒருகாலத்தில் காதலித்து பிரிந்தவர்கள். இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இந்நிலையில் அவர்கள் இருவரும் ஒன்றாக மீண்டும் மஹா படத்தில் நடிக்கவுள்ளதாக சமீபத்தில் வெளியான அறிவிப்பு அனைவருக்கும் சர்ப்ரைஸ் கொடுத்தது.

இதை ஹன்சிகாவும் ட்விட்டரில போட்டோ பதிவிட்டு உறுதி செய்தார். இந்த படத்தில் சிம்பு சில நிமிடங்கள் மட்டும் வரும் கதாபாத்திரமாகத்தான் இருக்கும் என பலரும் கருதி நிலையில், தற்போது அந்த பட இயக்குனர் ஒரு தகவலை கூறியுள்ளார்.

சிம்புவிற்கு படத்தில் மிக முக்கிய ரோல் என தெரிவித்துள்ள அவர், படத்தில் அரை மணி நேரம் சிம்பு வருவார் எனவும் கூறியுள்ளார். “இந்த ரோலுக்கு பல பெயர்களை நான் பரிசீலித்தேன், சிம்பு பெயரை சொன்ன போது ஹன்சிகா ‘நானே பேசுகிறேன்’ என கூறினார். கதையை கேட்ட சிம்பு உடனே ஒப்புக்கொண்டார்” என இயக்குனர் ஜமீல் கூறியுள்ளார்.

Related Articles

Close