கோலிவுட் செய்திகள்லேட்டஸ்ட்

‘ஷோலே’, ‘ரஷ் அவர்’ போல் இந்த படம் இருக்கும்: அருண் விஜய் படம் குறித்து தயாரிப்பாளர்!

அருண் விஜய் நடித்த படம் ஒன்று பாலிவுட்டில் ’ஷோலே’ போலவும் ஹாலிவுட்டில் ’ரஷ் அவர்’ போலவும் இருக்கும் என பிரபல தயாரிப்பாளர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

அருண்விஜய் நடித்து வரும் படங்களில் ஒன்று ’அக்னி சிறகுகள்’. மூடர் கூடம் நவீன் இயக்கியுள்ள இந்த படத்தில் அருண் விஜய்யுடன், விஜய் ஆண்டனி அக்சராஹாசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தில் பிரபல தயாரிப்பாளர் ஜேஎஸ்கே சதீஷ்குமார் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் அக்னி சிறகுகள் படத்தில் அருண் விஜய் பகுதியின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்துள்ளது. இதனை அடுத்து அருண் விஜய் தனது ட்விட்டர் பக்கத்தில் ’இந்த படத்தில் உள்ள ரஞ்சித் என்ற கேரக்டர் ’என்னை அறிந்தால்’ விக்டர் கேரக்டருக்கு பின்னர் எனக்கு மிகவும் பிடித்த கேரக்டர் என்று கூறியுள்ளார்
இதுகுறித்து தயாரிப்பாளர் சதீஷ்குமார் தனது டுவிட்டரில் கூறியபோது ’அருண் விஜய்யுடன் நான் நடித்துள்ள இந்த படத்தின் காட்சிகள் பாலிவுட்டில் ’ஷோலே’ போலவும் ஹாலிவுட்டில் ’ரஷ் அவர்’ போலவும் இருக்கும் என்று அவர் தெரிவித்துள்ளார்

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளதாகவும் இந்த ஆண்டு இறுதியில் அல்லது அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Related Articles

சினி உலகம்

CINENxT


This will close in 15 seconds

Close