கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

விஸ்வாசம் படத்தில் மறைமுகமாக வரும் விஜய் பற்றிய விஷயம், என்ன தெரியுமா?

விஸ்வாசம் நேற்று உலகம் முழுவதும் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. இப்படம் ரசிகர்களிடம் குறிப்பாக குடும்ப ரசிகர்கள் விரும்பி பார்க்கும்படி உள்ளது.

இந்நிலையில் விஸ்வாசம் படத்தில் மறைமுகமாக ஒரு இடத்தில் விஜய் குறித்து ஒரு விஷயம் வரும், இதை அவர்கள் தெரிந்து வைத்தார்களா? இல்லையா? என்று தெரியவில்லை.

ஆனால், ரசிகர்கள் இணையத்தில் ஒரு காட்சியை குறிப்பிட்டு சூப்பர் கருத்து கூறுகின்றனர்.

அதாவது படத்தில் ஒரு சண்டைக்காட்சியின் போது தன் மகளிடம் அஜித் ‘இதுவரை எத்தனை போட்டிலமா ஜெயிச்சுருக்க?’ என்பார்.

அதற்கு அவருடைய மகள் 62 என்று சொல்வார், உடனே அஜித் ‘அடங்கேப்பா’ என்று ட்ரைலரில் வரும் வசனத்தை சொல்வார். விஜய் இதுவரை 62 படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதை இரண்டையும் ஒப்பிட்டு ரசிகர்கள் பேசி வருகின்றனர்.

Related Articles

Close