கோலிவுட் செய்திகள்லேட்டஸ்ட்

விஷ்ணு விஷால் – ராணா இணையும் காடன்

பிரபு சாலமன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் – ராணா டகுபதி இணைந்து நடிக்கும் படத்தின் தமிழ், தெலுங்கு பதிப்பிற்கான தலைப்புகள் வெளியாகி இருக்கிறது. #Kaadan #VishnuVishal #RanaDaggubati

`கும்கி-2′ படத்தை இயக்கி வரும் பிரபு சாலமன், அதேநரேத்தில் `ஹாதி மெரே சாதி’ படத்தின் தமிழ், தெலுங்கு பதிப்பையும் இயக்கி வருகிறார். விஷ்ணு விஷால் – ராணா டகுபதி இணைந்து நடிக்கும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மூணாரில் முடிந்துவிட்டது.



அடுத்தகட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவிருக்கும் நிலையில், படத்தின் தலைப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அதன்படி படத்தின் தமிழ் பதிப்பிற்கு `காடன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் தெலுங்கு பதிப்புக்கு `ஆரண்யா’ என்றும் தலைப்பு வைத்துள்ளனர்.</div>

தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இந்த படத்தை ஈராஸ் இன்டர்நேஷனல் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்தி பதிப்பில் புல்கித் சாம்ராட் நடித்த கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷால் நடிக்கிறார். இந்த படத்தின் மூலம் விஷ்ணு விஷால் தெலுங்கு சினிமாவிலும் அறிமுகமாகிறார். #Kaadan #VishnuVishal #RanaDaggubati



Related Articles

Close