கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

விஜய் நடிக்கும் மாஸ்டர் பட கதையே இதுதானா?- கசிந்த தகவல்

கைதி படத்தின் மூலம் தான் எப்படிபட்ட இயக்குனர் என்பதை நிரூபித்தவர் லோகேஷ் கனகராஜ். அப்பட வெற்றியை தொடர்ந்து விஜய்யை இயக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.மாஸ்டர் என்ற பெயரில் விஜய்யின் 64வது படத்தை இயக்கி வருகிறார். அண்மையில் படத்திற்கான படப்பிடிப்பு நெய்வேலியில் நடந்தது, அங்கு தளபதியை காண சூழ்ந்து கூட்டத்தை நாமே பார்த்தோம். அடுத்தக்கட்டமாக படக்குழு சென்னையில் தான் படப்பிடிப்பு நடத்த உள்ளார்களாம், இதற்கு நடுவில் இன்று படத்தின் குட்டி கதை என்ற பாடலும் வெளியாக இருக்கிறது.

படத்தின் கதை இதுதான் என்று ஒரு கதையும் வைரலாகி வருகிறது. அதில், கல்லூரியில் பேராசிரியராக இருக்கும் ஹீரோ, தனது தொடர் குடிப்பழக்கத்தால் அந்த வேலையிலிருந்து மாற்றப்பட்டு, சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் பணியமர்த்தப்படுகிறாராம். அங்கு சிறுவர்களை வைத்து நடத்துப்படும் போதைப் பொருள் மாஃபியாவைப் பற்றித் தெரியவர, அந்த வேலையைச் செய்யும் வில்லனைத் தேடிப்பிடித்து அழிக்கிறார்.

Tags

Related Articles

Close