கோலிவுட் செய்திகள்லேட்டஸ்ட்

விஜய் சேதுபதி படத்திலிருந்து திடீரென விலகிய பிரபல நடிகை:

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தற்போது சுமார் அரை டஜனுக்கும் மேலான படங்களில் நடித்து வரும் நிலையில் அவற்றில் ஒன்று ’துக்ளக் தர்பார்’ என்பது குறிப்பிடத்தக்கது. டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க அதித்தி ராவ் ஹைதரி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். இந்த நிலையில் திடீரென இந்த படத்தில் இருந்து அவர் விலகி விட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட கால்ஷீட் பிரச்சனையால் அவர் இந்த படத்தில் இருந்து விலகியுள்ளதாக தெரிகிறது.

இந்த நிலையில் அதிதிராவ்க்கு பதிலாக இந்த படத்தில் ராஷிகண்ணா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். இவர் ஏற்கனவே விஜய் சேதுபதியுடன் ‘சங்கத் தமிழன் ’என்ற படத்தில் நடித்துள்ளார் என்பதும் ஜெயம் ரவியின் ’அடங்கமறு’ விஷாலின் ‘அயோக்யா’ ஆகிய படங்களிலும் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

விஜய் சேதுபதி மீண்டும் ஜோடி சேர்ந்துள்ள ராஷிகண்ணாவுக்கு அவரது ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்
Related Articles

Close