கோலிவுட் செய்திகள்லேட்டஸ்ட்

விஜய் ஓகே சொன்னது இதற்காக தானாம்! அடுத்த படம் – அசரவைத்த விசயம் -முக்கிய தகவல்

கடந்த வருடம் தீபாவளிக்கு அட்லீ இயக்கத்தில் வந்த பிகில் படத்தை அடுத்து இவ்வருட தீபாவளிக்கு லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மாஸ்டர் படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் கொரோனாவால் படம் அடுத்த வருடம் 2021 க்கு தள்ளி வைக்கப்பட்டது.

ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு இணங்க தீபாவளிக்கு மாஸ்டர் டீசர் வெளியிடப்பட்டது வேற லெவல் சாதனை செய்து அசத்திவிட்டது. பொங்கலுக்கு வரப்போகும் இந்த படம் எப்படியும் வசூல் வேட்டை நடத்தும் என்பதில் சந்தேகமில்லை.

இதற்கிடையே விஜய்யின் அடுத்த படம் குறித்து பல்வேறு பேச்சுக்கள் ஓடிக்கொண்டிருக்கின்றன. இதில் இயக்குனர் நெல்சன் திலிப் குமார் தான் விஜய்யுடன் அடுத்ததாக இணையப்போகிறார் என்பது திட்டவட்டமாக தெரிகிறது.
நயன்தாரா, யோகி பாபு நடித்த கோலமாவு கோகிலா படத்தின் மூலம் கவனத்தை ஈர்த்த நெல்சன் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படத்தையும் இயக்கியுள்ளார்.

மேலும் நெல்சன் தன் பாணியில் முழுக்க முழுக்க காமெடியாக கதை சொல்லியுள்ளாராம். ஹீரோ விஜய்யின் பிம்பத்திற்கும் இடையூறு இல்லாமல் இருந்ததால் விஜய் அவருக்கு ஓகே சொல்லிவிட்டாராம்.

விஜய்யும் காமெடியில் கலக்குவார் என்பது அனைவரும் அறிந்ததே.

Related Articles

சினி உலகம்

CINENxT


This will close in 15 seconds

Close