கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

விஜய்யின் மாஸ்டர் படம் பற்றி வந்த வதந்தி உறுதியானது- நடிகரே போட்ட டுவிட்

இளம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துவரும் படம் மாஸ்டர். இதுவரை படத்தின் 2 போஸ்டர்கள் வெளியாகிவிட்டது. ரசிகர்களும் கொண்டாட்டம் போட்டு வருகின்றனர். நேற்று புதிய போஸ்டர் வெளியானது ரசிகர்களுக்கு இன்னும் ஸ்பெஷல் தான்.நடிகர் மகேந்திரன் விஜய்யுடன் நடித்த பழைய படத்தின் புகைப்படம் போட்டு நாங்கள் இருவரும் ஒரே போஸ், விஜய் அவர்கள் எனக்கு அப்பவே மாஸ்டர் தான் என பதிவு செய்தார்.

இதற்கு ரசிகர் ஒருவர், உங்களுடைய திறமையால் மேலே வராமல் ஏன் விஜய்யை பயன்படுத்துகிறீர்கள் என்று கேட்க, அதற்கு மகேந்திரன் 2020ல் பார்ப்பீர்கள் என பதிவு செய்துள்ளார். நடிகர் மகேந்திரன் மாஸ்டர் படத்தில் நடிக்கிறார் என்று வதந்திகள் வந்திருந்த நிலையில் அதை உறுதி செய்யும் வகையில் அவரது டுவிட் உள்ளது.


Tags

Related Articles

Close