Bigg Boss Tamil Season 2லேட்டஸ்ட்

விஜய்டிவியில நான் கொட்டிய குப்பையை என் மேலேயே கொட்டிடாங்க – பிக்பாஸ் பாலாஜி ஓபன்டாக்

பிக்பாஸ் 2 நிகழ்ச்சி பல சர்ச்சைகளுக்கு பிறகு கடந்த மாதம் வெற்றிகரமாக நிறைவு பெற்றது. இந்த நிகழ்ச்சியில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது பாலாஜி மீது ஐஸ்வர்யா குப்பை கொட்டிய சம்பவம்தான்.

ஆனால் இதை பாலாஜி கிண்டலாக தற்போது கூறியுள்ளார். அதாவது அவர் மற்றொரு காமெடி நிகழ்ச்சிக்கு சென்றபோது அவரைப்போல வேடமிட்ட மிமிக்ரி கலைஞர், பிக்பாஸை முதலில் கூப்பிட்டவுடன் என்ன நினைத்தீர்கள் என்று கேட்டார்.






அதற்கு பாலாஜி, முதலில் விஜய்டிவியில் குப்பைக்கொட்டிக்கொண்டிருந்தேன் (கலக்கப்போவது யாரு ஜட்ஜாக இருந்தார்). பிக்பாஸ்க்கு போன பின்பு என் மீது குப்பை கொட்டிவிட்டாங்க என்று நகைச்சுவையாக கூறிவிட்டார்.

Related Articles

Close