சின்னத்திரைலேட்டஸ்ட்

வாணி ராணி சீரியலை தொடர்ந்து ராதிகாவின் அடுத்த பிரம்மாண்ட சீரியல்! எல்லோரும் எதிர்பார்த்த புரமோ வீடியோ வந்தாச்சு

சின்னத்திரை மக்களின் வாழ்க்கையில் கலந்துவிட்ட ஒன்று என்றே சொல்லலாம். பல சீரியல்கள், இது போதாதென்று தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட மற்ற சீரியல் வேறு. இதனால் போட்டி முற்றிவிட்டது.

அது மட்டுமல்ல டிவி சானல்கள் TRP ரேட்டிங்ஸ் ல் இடம் பிடிக்கும் முந்தியடித்துக்கொள்கிறார்கள். சீரியல்களில் பெரும் புரட்சி கொண்டு வந்தவர் நடிகை ராதிகா. ரசிகர்களால் என்றும் மறக்க முடியாதளவுக்கு பல சீரியல்களை கொண்டு வந்து பெரும் தாக்கத்தை கொடுத்த பெருமை இவரையே சாரும்.

கடைசியாக அவரின் இரட்டை நடிப்பில் வாணி ராணி சீரியல் வந்த பல வருடங்கள் ஓடியது. அதன் பின் சிறு இடைவெளி. அதிலும் அவர் இம்முறை சந்திர குமாரி என பிரம்மாண்ட வரலாற்று சீரியலை எடுத்திருக்கிறார்.

அதில் அவரே ராணி போல நடித்திருக்கிறார். வாணி ராணியை தொடர்ந்து அவரின் அடுத்த சீரியலான இதை எல்லோரும் எதிர்பார்த்திருந்தார்கள். தற்போது அதன் புரமோ வீடியோ வந்தாச்சு.

Related Articles

Close