கோலிவுட் செய்திகள்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

வலிமை தயாரிப்பாளரின் மகள்கள் செய்த வேலைய பாருங்க! போட்டோவுடன் ஒரு ட்வீட்

தல அஜித் நடித்து வந்த வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர். கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு வேலைகள் மீண்டும் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள்.

வெளிநாடுகளில் தற்போது சூழல் சரியில்லாமல் இருப்பதால் உள்நாட்டிலேயே படப்பிடிப்பை நடத்தி முடிக்க திட்டமிடுகிறார்கள்.

இது ஒருபக்கம் இருக்க தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் ஜான்வி கபூர் சினிமா ஹீரோயினாக விட்டது நாம் அனைவரும் அறிந்ததே. குஷி கபூர் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்களுக்கு இருக்கிறது. அக்காவை போல குஷி கபூரும் அவ்வப்போது சோசியல் மீடியா சென்சேசனாக மாறுவது வழக்கம்.

இந்த கொரோனா காலத்தில் அக்கா தங்கை இருவரும் ஓவியங்கள் கைவினை பொருட்களை செய்ய அதை புகைப்படம் எடுத்து அப்பா வெளியிட தற்போது சமூக வலைதளத்தில் அவை ரசிகர்களை கவர்ந்துள்ளன.

ஜான்வி கபூர் நடிப்பில் நெட்பிளிக்ஸில் Gunjan Saxena – The Kargil Girl என்ற படம் வெளியானது.

Related Articles

Close