கோலிவுட் செய்திகள்திரைப்படம்தென்னிந்திய சினிமாலேட்டஸ்ட்

வசூல் விவரங்கள் அனைத்தும் பொய்யா? சன் பிக்சர்ஸ் அதிர்ச்சி பதிவு

தமிழ் சினிமாவில் படத்தின் டிக்கெட் விற்பனை மற்றும் வசூல் விவரங்களை ட்ராக் செய்ய அதிகாரபூர்வமாக எந்த ஏற்பாடும் இல்லை. தயாரிப்பாளர் சங்கம் அதற்கான பணிகளை செய்யும் என விஷால் கூறினாலும் இருத்துவரை எந்த விஷயமும் பலவருடங்கள் ஆகியும் செய்யப்படவில்லை.

இந்நிலையில் சமீபத்தில் வெளிவந்த பேட்ட மற்றும் விஸ்வாசம் ஆகிய படங்களின் வசூல் விவரங்கள் தினம்தோறும் வெளியாகிக்கொண்டிருக்கிறது. அதில் தமிழ்நாட்டில் பேட்ட படத்தை விட விஸ்வாசம் தான் அதிகம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் பேட்ட படத்தை தயாரித்த சன் பிக்சர்ஸ் ட்விட்டரில் “600+ தியேட்டர்களில் வரும் வசூல் விவரங்கள் எங்களுக்கே இன்னும் சரியாக வந்து சேரவில்லை. உங்களுக்கு எப்படி தெரியும் ?” என கூறியுள்ளார்.

இதனால் பேட்ட 100 கோடி வசூலித்துவிட்டது என பரவிய தகவல்கள் அனைத்தும் பொய் என்பது உறுதியாகியுள்ளது.

Related Articles

Close