தென்னிந்திய சினிமாபாலிவுட் சினிமாலேட்டஸ்ட்

வசூலை வாரிக்குவிக்கும் KGF! சூப்பரான சாதனையோடு வசூல் தொகை இதோ

கன்னட சினிமாவில் முக்கிய படமாக தடம் பிடித்திருக்கிறது. அண்மையில் வந்த KGF படம். கன்னட வட்டார சினிமா பாக்ஸ் ஆஃபிஸில் இது ஒரு மைல் ஸ்டோன் என்றே சொல்லலாம்.

நடிகர் யாஷ் நடித்துள்ள இப்படத்தை பிரசாந்த் நீல் இயக்கியுள்ளார். கடும் போட்டிக்கு நடுவில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இப்படம் 10 நாட்களில் ரூ 152 கோடிகளை வசூல் செய்து கிளப்பில் இணைந்தது.

தற்போது படம் வெளியாக 3 வாரங்களை கடந்துவிட்டது. இந்த 17 நாட்களில் தெலுங்கு வட்டாரத்தில் மட்டும் ரூ 10.28 கோடிகளை வசூல் செய்துள்ளதாம். ஹிந்தியில் முதல் வாரத்தில் ரூ 21.45 கோடியையும், 2 ம் வாரத்தில் ரூ 11.50 கோடியை பெற்றிருக்கிறது. மேலும் 3 ம் வாரத்தில் ரூ 4.25 கோடியை பெற்றுள்ளது.

மொத்தமாக இப்படம் ரூ 198.5 கோடியை வசூல் செய்துள்ளதாம். விரைவில் 200 கோடி கிளப்பில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Articles

Close